அடடே நம்ம நடிகர் விஜயகுமார் பேரன் பேத்தியா இது?? படத்தில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்களா?? லேட்டஸ்ட் புகைப்படம்..!!

செய்திகள்

வாரிசு நடிகர்கள், ஹிந்தியில் தான் அதிகம் என நினைத்து கொண்டிருந்த நேரம் தான் தமிழும் வாரிசு நடிகர்களை அறிமுக படுத்தியது. தற்போது ஹிந்தி சினிமாவுக்கு இணையாக வாரிசு நடிகர்களை இறக்கியுள்ளது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர்.

 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். சமீப காலமாக அவரின் கதை தேர்வுகள் வேறு உன்னிப்பாக மாறி கொண்டே வருகிறதாம்.

நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.

சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.

இதில் 9 வயதாகும் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். முதல் படமே நடிகர் சூர்யா அவர்களை தயாரிப்பில் உருவாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார்.

இந்த படம் குறித்து சரோவ் சண்முகம் கூறுகையில்,ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியே சிறு வயதிலேயே அவர்களை களமிறக்கி விட்டால் எதிர்காலத்தில் சுலபமாக படங்களில் நடிக்க வைத்து விடலாம்  என தான் இதனை செய்கிறார் எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *