தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளாக இருந்து முன்னணி நடிகையாக வளம் வர பல கஷ்டங்களை தாண்டி வர வேண்டிருக்கும். அந்த வகையில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக நடித்தாலும் பையா படத்தின் மூலம் நடித்ததால் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியா தமன்னா நடித்திருந்தார்.
பெரும்பாலான காட்சிகள் ரோட்டிலேயே தான் இருக்கும். இப்படத்தின் அனுபவத்தை பற்றி இயக்குநர் லிங்குசாமி பேட்டியொன்றில் கூறியுள்ளார். இப்படத்தில் முதன் முதலாக நடிகை நயன்தாரா தான் கமிட்டாகினார்.
அதிக சம்பளம் கேட்டதால் பேச்சு வார்த்தையை நிறுத்தி தமன்னாவை கமிட் செய்தோம். பெரும்பாலான படப்பிடிப்புகள் ரோட்டிலேயே தான் நடக்கும். எங்களிடம் அப்போது கேரவன் இல்லாமல் சிரமப்பட்டோம்.
நடிகைகளுக்கு கூட கேரவன் இல்லாததால் நடிகை தமன்னா புடவைகள் பெண்கள் பிடித்துக் கொண்டு ரோட்டிலேயே ஆடைகளை மாற்றுவார். இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சி ரமம் பார்க்காமல் ஆடைகளை மாற்றிக் கொண்டார் தமன்னா. ஒரு நடிகை இப்படி இயக்குநர்களின் நிலையை புரிந்து கொண்டு நடிப்பது யாராலும் முடியாது என்று கூறியுள்ளார்.