விஜய்டிவி குக்கு வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவி ஆரம்பித்த புதிய நிகழ்ச்சி..!! இதோ வைரலாகும் அந்த ப்ரோமோ..!!

குக் வித் கோமாளி

TRB எனற ஒன்று தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்தியாசமான மக்களுக்கு பிடிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பலவேறு ஷோக்கள் உள்ளன, எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத மிகப்பெரிய பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைத்திற்கும் மிக முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

எந்த தமிழ் தொலைக்காட்சியிலும் இது போன்ற ஒரு வரவேற்பு எந்த நிகழ்ச்சிக்கும் கிடையாது என சொல்லலாம்.தற்போது இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள வேறு எந்த தொலைக்காட்சியிலும் ரியாலிட்டி நிகழ்ச்சி இல்லை. இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் ‘master chef ‘ என்ற புதிய நிகழ்ச்சியை துவங்கி இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.இதோ அந்த ப்ரோமோ உங்களுக்காக..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*