நடிகர் கமலுடன் தொடர்பில் இருந்த நடிகை பூஜா குமாருக்கு திருமணமாகி விட்டதா? அட கணவர் இவர் தானா.. யார் தெரியுமா?

திரையரங்கம்

திரைத்துறையில் இருப்பவர்கள் மீது விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வருவது சகஜமான ஒன்று தான். இது பெரும்பாலும் குறிப்பிட்ட நடிகர் மீதோ அல்லது நடிகையின் மீதோ தான் அடிக்கடி இந்த கிசுகிசுக்களும் எதிர்ப்புகளும் வரும் அதிலும் பொதுவாக இந்த இளம் நடிகர்களின் மீதோ அல்லது வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளின் மீதோ தான் அதிகம் கிசுகிசுக்கள் வரும்.

இப்படி இந்த கிசுகிசுக்களை காதில் போட்டு கொல்லாமல் அடுத்த கட்டத்திற்கு உயரும் நடிகர் நடிகைகளையும் இதுவரை பார்த்துள்ளோம். இப்படி நடிகர் ஜெமினி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் அது நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என்றே சொல்லலாம்.

இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு முத்த காட்சிகளை முதன் முதலில் அறிமுகம் செய்த நடிகரே கமல் தான். இன்றும் முத்த காட்சிகள் என்று எடுத்தால் அவரது பெயர் அடிபடாமல் இருக்காது. இப்படி இவர் மீதான விமர்சனங்களும் சர்ச்சைகளும் இன்று வரை ரசிகர்கள் மத்தியிலும் இன்றும் ஓய்ந்த பாடில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த 2000 ஆம் ஆண்டு காதல் ரோஜாவே என்ற திரைப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை பூஜா குமார். இப்படி இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருந்தார்.

இப்படி இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் கூட கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம் மூலமே தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காணப்பட்டார். இப்படி அந்த திரைப்படத்தினை தொடர்ந்து உத்தமவில்லன், விஸ்வரூபம் இரண்டாம் பாகம் என நடித்த pooja குமாரும் நடிகர் கமல்ஹாசனும் உறவில் இருக்கிறார்கள் என பல செய்திகளு கிசுகிசுக்கப்பட்டது.

இதனை பற்றி சமூக வலைத்தளங்களில் செய்தியும் பரவியது அதற்கு பூஜா குமார் விளக்கமும் அளித்தார். இந்நிலையில் பூஜா குமாரின் முன்னால் கணவர் பற்றிய செய்தியும் புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகியது

கார்ப்பரேட்  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூஜாவிற்கு தற்போது குழந்தையும் உள்ளது. அதனை கணவர் வெகு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *