தமிழ் சினிமாவில் புதுபுது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சித்தாரா. அதன்பின் உன்னை சொல்லி குற்றமில்லை, அர்ச்சனா ஐஏஎஸ் போன்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து புகழ் பெற்றார்.
சில படங்கள் இதற்கு பிறகு நடித்து வந்த சித்தாரா, தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.தற்போது 46 வயதாகும் சித்தாரா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில் தான் இன்னும் திருமணமாகமல் இருப்பதற்கான காரணத்தினை கூறியுள்ளார்.
திருமணம் செய்யாமல் இருப்பது என் முழு முடிவுதான். என் வாழ்க்கையில் முக்கிய நபரை இழந்தேன். அது என் அப்பா தான். அவர் இறந்ததிலிருந்து திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவேயில்லை என்று கூறியுள்ளார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.இதிலிருந்து அவர் தனது தந்தை மீது வைத்திருந்த உண்மையான அன்பு என்ன என்பது நன்றாக புரிகிறது.
பெற்ற தாய் தநதையை வீட்டை விட்டு விரட்டி மதிக்காத இந்த காலத்தில், இப்படி ஒரு பெரிய நடிகை செய்யும் செயல் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம். இதை நாமும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு நாமும் அது போல் செயல்படுவோம் நன்றி.