
தமிழில் விஜய் மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிம்ரன்.தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் கூடிய விரைவிலேயே தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.இதனாலேயே விஜய்,அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.ஒன்ஸ்மோர்,நட்புக்காக,துள்ளாத மனமும் துள்ளும்,கண்ணெதிரே தோன்றினாள் ,ஜோடி ,பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் திரை அரங்குகளில் சக்கை போடு போட்டன.
நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வில்லியாக நடித்திருந்தார்.
அண்மையில் உடல் தோற்றத்தை மிகவும் மாற்றி டிக் டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருக்கும் அவர் நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.அவரின் குழந்தைளை, கணவரை பார்த்திருப்பீர்கள் தானே. தற்போது அவரின் சகோதரரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த பலரும் அவரை சினிமாவில் காணவில்லையே என கேட்டு வருகின்றனர்.
சிம்ரன் மற்றும் கணவர்
Leave a Reply