தமிழ் சினிமா பிரபலங்களில் வாரிசுகள் சினிமாவில் நுழைவது சகஜமான ஒன்றே. அப்படியானவர்கள் மீது எதிர்பார்ப்பும், கவனனும் கூடுதலாகவே இருக்கும். இந்நிலையில் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா நடிகை அம்பிகாவின் மகனுக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால் அந்த அப்படம் வெளிவரவில்லை. இந்நிலையில் ஜோவிதா பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்தார். நடிக்க ஆரம்பித்த சில மாத காலத்திலேயே அதிலிருந்து விலகப்போவதாக கூறினார். ஆனால் காரணம் எதுவும் சொல்லவில்லை.
மேலும் இந்நிலையில் லிவிங்ஸ்டன் மகளின் முடிவு குறித்து விளக்கமளித்துள்ளார். பூவே உனக்காக சீரியலிலிருந்து ஜோவிதா விலகியது நாங்களாக எடுத்த முடிவு. யாரும் விலக்கல்ல. நடிக்க தொடங்கிய சில காலத்திலேயே இப்படி ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டது நினைத்து வ ருத்தம் கொள்கிறோம்.
இதற்கு காரணம் உள்ளது. அதை இப்போது சொல்லி சம்பந்தட்டவர்களை நோ கடிக்க விரும்பவில்லை. டிசம்பர் 15 ல் மகள் விலகுகிறார். தேவைப்பட்டால் காரணத்தை பின்னர் அறிவிப்போம்.என்று கூறியுள்ளார்.