தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுடைய பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பதாக ஒரு மிகப்பெரிய சர் ச்சையை எ ழுந்தது.இதனால் மக்களும் அ திர்ச்சியில் இருந்தனர்.இதனை தொடர்ந்து `சிக்னல்’ மற்றும் `டெலிகிராம்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.பல்வேறு செயலிகள் புதிதாக வந்துள்ளது.
இந்நிலையில் சன்டேஸ் செயலியை தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடிவமைத்துள்ளது. இந்த செயலியை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்த விரும்புவோர் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இதை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் இணையதள வடிவிலும் இந்த செயலி உள்ளது என்றும் கூறப்படுகிறது . மக்களும் ஆர்வத்துடன் புதிய செயலியை எதிர்பார்த்து உள்ளனர் .’வாட்ஸ் அப்’பில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த செயலியில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.ஆனால் வாட்ஸ் அப்பின் இடத்தை இந்த சன்டேஸ் செயலி பிடிக்குமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
https://www.gims.gov.in/ இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.