சின்னத்திரை டிவி மூலம் பிரபலமான சிவாங்கி பாடகியாக மக்கள் மனதில் பதிந்தாலும் அவர் இப்போதெல்லாம் காமெடி பிரபலமாக இடம் பிடித்துவிட்டார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அவரை அப்படி மாற்றிவிட்டது எனலாம்.குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 1 ல் போட்டியாளராக பங்கேற்றதை தொடர்ந்து தற்போது சீசன் 2 கோமாளியாக பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியால் அவருக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.தற்போது சிவாங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவரின் எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடி #GoBackModi என டிவிட்டரில் ட்ரெண்ட் செய்வர்.
அதே நேரத்தில் அவரின் ஆதரவாளர்கள் #TNWelcomesModi என அதற்கு போட்டியாக வரவேற்பும் தெரிவிப்பர். இம்முறையும் தமிழகம் வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என பலரும் பதிவிட சிவாங்கியும் அதை பதிவிட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
— Sivaangi Krish (@Sivaangi_Offi) February 13, 2021