அடேங்கப்பா! 58 வயதில் திருமணமாகாமல் 750 படங்களுக்கு மேல் நடித்த கோவை சரளாவின் மறுபக்கத்தில் இப்படியொரு சோ கமா?

தமிழில் சிறந்த காமெடி நடிகை என்றால் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி, செந்தில், வடிவேலு தான். ஆனால் பெண் காமெடியன்கள் என்று விரல் விட்டு எண்ணி பார்த்தால் குறைவு தான். தமிழ் திரைப்படங்களில் சிறந்த முறையில் தனது நடிப்பால் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றும் ஆச்சி என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு பின்பு இருப்பவர் நடிகை கோவை சரளா மட்டும் தான்.

காமெடி நடிகையாலும் கமல் போன்ற பெரிய நடிகருக்கு ஜோடியாக நடிக்க முடியும் என நிரூபித்தவர் நடிகை கோவை சரளா. 1983ல் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவை சரளா.

கரகாட்டக்காரன் திரைப்படம் கோவை சரளாவுக்கு வேற லெவல் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதே போல் வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடிகள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது. இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்தும் இருக்கிறார்.

2008க்கு பின்பு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. சில காலங்கள் உறவினருடன் நேரத்தினை செலவிட்டு வந்தார். இதையடுத்து 2013ல் காஞ்சனா படம் மூலம் மீண்டும் வாய்ப்பை பெற்று செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்திருக்கிறார்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. இதற்கு காரணம் என்ன என்று யாரிடமும் கூறாமல் இருந்து வருகிறார்.தன் உடன் பிறந்த நான்கு சகோதிரிகள், ஒரு சகோதரனுக்கு திருமணம் செய்து வைத்த கோவை சரளா அவர் மட்டும் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கும் கோவை சரளா, தன் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளையே தன் பிள்ளைகளாக பாவித்து வருகிறார். முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி போய் உதவி செய்கிறார் கோவை சரளா. இப்படிபட்ட நல்ல நடிகையை தமிழ் சினிமா பெற்றிருப்பது மிகையாகாதது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*