தென்றல் சீரியலில் நடித்த இந்த பெண் யார் தெரியுமா? இன்று பிரபல நடிகையாக உள்ளார்.. யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு வேடத்தில் தான் தோன்றியுள்ளார்கள் என்பது நம் பலருக்கும் தெரியும். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் திகழ்ந்து வரும் த்ரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தான் இப்பொழு து இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்.

அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கனவுக் கன்னியாக தொடர்ந்து வரும் ஒரு நடிகை தான் வேறு யாரும் இல்லைங்க இவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் தான். நடிகை ஐஸ்வர்யா மேனன் 1995ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார்.

அதன் பிறகு சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழ் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான். ஆனால் அந்தப் படத்திற்கு முன்பு சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு எனற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதில் நடிகை ஹன்சிகாவின் தோழியாக நடித்துள்ளார். அதேபோல் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார். ஆனால் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலில் நடித்துள்ளார் என்பது இன்று வரை பலருக்கும் அறிந்திராத ஒரு விஷயமாகும்.

இந்த சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தென்றல் சீரியலில் இவர் நடித்த காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *