விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி வெற்றி நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் கடந்த ஏழு சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு எட்டாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது சூப்பர் சிங்கர்.
இந்த எட்டாவது சீசனில் பல சிறந்த போட்டியாளர்கள் இருக்க, முதல் எபிசோடில் நன்றாக பாடி மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் ஆதித்யா கிருஷ்ணன்.
இவர் பிரபல நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்று தற்போது தெரிய வந்துள்ளது. ஆம் விஜய்யின் வசீகரா மற்றும் அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட படங்களில் மீரா கிருஷ்ணன் நடித்துள்ளார்.