எனக்கும் சோமிற்கும் இடையில் இருப்பது எந்த மாதிரி தொடர்பு தெரியுமா? ஆர்வத்தில் உண்மையை உளறி ரசிகர்களுக்கு ஷாககொடுத்த ரம்யா பாண்டியன்..!!

வைரல் வீடியோஸ்

சமீபத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த பிக்பாஸ் 4 சீசன் நிறைவடைந்து டைட்டிலை ஆரி கைபற்றி சென்றார். நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். நிகழ்ச்சியில் பலருக்கு இடையில் கிசுகிசுக்கள் கிளம்பினாலும் இந்த சீசனில் முடிந்த பிறகு கிசுகிசுக்கள் ஆரம்பித்து வருகிறது.

அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கும் சோமுக்கு இடையில் காதல் என்று பேசப்பட்டது. அதற்கேற்ப பிக்பாஸ் பிரீஸ் டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் தம்பி சோமை மச்சான் என்று கூறினார். மேலும் ரம்யா பாண்டியனின் சகோதரி பேட்டியொன்றில், இருவருக்கும் உள்ள தொடர்பு கெமிஸ்டி பற்றி கேள்விக்கும், திருமணம் செஞ்சிகிட்டா ஓகே வா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அது அவர்களின் விரும்ப்பம் அவளுக்கு பிடிச்சா பன்னிக்கிட்டும் என்று பதிலளித்தார். இது குறித்து ரம்யா-சோம் ஜோடிகள் பற்றி காதல் மீம்ஸ் வைரலாகியது.

தற்போது ரம்யா பாண்டியனிடம் சமீபத்தில் சோம் பற்றிய கேள்விகள் லைவ் சாட்டில் கேட்கப்பட்டது. அதற்கு, சோம் நல்ல நண்பர். எனக்கும் சோமிற்கு இடையில் எதுவும் கிடையாது. மற்றவர்களுடன் பழகியது போன்று தான் அவரிடம் பழகி இருந்தேன் என்றும் பதிலளித்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *