விவசாயம் செய்தால் வருமானம் வருகிறதோ இல்லையோ, விவசாய வீடியோக்கள் செய்தாலே இப்போதெல்லாம் வருமானம் கொட்டோ, கொட்டெனக் கொட்டுகிறது. இதோ இங்கேயும் அப்படித் தான் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய ஒரு இளம் ஜோடி விவசாயம் செய்து அதை வீடியோவும் ஆக்கி மாதம் 5 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாகத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தியாவைச் சேர்ந்த ராம்டே, பாரதி தம்பதியினர் பிரித்தானியாவில் வேலை செய்து வந்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை அங்கு செய்த வேலையை விட்டு விட்டு தாயகம் திரும்பினர்.
ராம்டேவின் வயதான பெற்றோரைக் கடைசி காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே செட்டிலாகி விட்டனர். அதன் பின்னர் என்ன வேலை செய்யலாம் என யோசித்த இந்த இளம் தம்பதியின் கவனம் விவசாயம் பக்கம் திரும்பியது.
தற்போது விவசாயத்தோடு சேர்ந்து பசு, எருமைகள், கோழி, வாத்து என கால்நடைகளையும் சேர்த்து வளர்க்கின்றனர். வெளிநாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்த இவர்கள் எருமை மாட்டைக் குளிப்பாட்டுவது தொடங்கி நன்கு கவனித்துக் கொள்கின்றனர்.
மேலும் இவர்கள் கூடவே இதை யூடியூப்பிலும் வீடியோவாகப் பதிவேற்ற மாதம் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறதாம்.இதைப் பற்றி மகிழ்ச்சி ததும்ப அந்த தம்பதியினர் கூறுகையில் மெயின் ஜாப் என்னவோ அக்ரிகல்சர் தான். ஜஸ்ட் டைம்பாஸ்க்கு தான் அதை வீடியோவாக எடுத்தோம்.
ஆனால் வில்லேஜ் லைப் எவ்வளவு அழகுன்னு காட்டத்தான் வீடியோ எடுத்தோம். இப்போ அதுக்கு 7 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்துட்டாங்க..என நெகிழ்ச்சியோடு சொல்கிறார்கள்.