தமிழ் திரையுலகில் ஒருசில நடிகைகளுக்குத் தான் நடிப்பை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் ரசிகர்கள் உண்டு. காரணம் காக்கா முட்டை திரைப்படத்தில் இரு சிறுவர்களின் அம்மாவாக வடசென்னை பெண்ணாக வாழ்ந்திருப்பார் ஐஸ்வர்யா.
அந்த பாத்திரம் அவருக்கு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. தன் வயதை ஒத்த இளவயது ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டே இன்னொரு புறத்தில் சாமி 2ம் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். தர்மதுரை, கனா படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.
இப்போது தெலுங்கிலும் அம்மணி ஏக பிசி. மூன்று தலைமுறையாகவே ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் நடித்து வருகிறது. அவரது சகோதரரும் சீரியல் நடிகராக உள்ளார். கடந்த 2012 இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் அட்ட கத்தி படம் வெளியானது. இதில் தினேஷ், நந்திதா நடித்தனர்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்ம் சின்ன பாத்திரத்தில் நடித்தார். இதில் ஒரு காட்சியில் திவ்யா, நதியா என இருபெண்கள் நடித்திருப்பார்கள். அதில் திவ்யாவாக வருபவர் நடிகை ஐஸ்வ்ர்யா ராஜேஷின் சொந்த அண்ணி சோபியா தான். அவரது சகோதரரான மணிகண்டனின் மனைவி தான் இவர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி படத்திலும் நடன ஆசிரியராகவும் நடித்துள்ளார். ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்டன் வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களிலும் நடித்துள்ளார். சோபியா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.