கோவிலுக்குவரும் பக்தர்களை நாய் ஒன்று ஆசிர்வாதம் செய்தும், கைகொடுக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மகாராஷ்டிராவில் உள்ளது அஹமத்நகர் என்ற மாவட்டம். இந்த மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் அமைந்துள்ளது சித்திவிநாயகர் கோவில் ஒன்று. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலுக்கு பக்கதர்களுடன் கைகுலுக்கி, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து, இணையத்தில் வைரலாகிவருகிறது நாய் ஒன்று.
கோவிலின் உள்ளே சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் பக்கதர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கையை நீட்டி அவர்களுடன் கைகுலுக்குவது, அவர்களுக்கு ஆசீர்வாத செய்வது என அந்த நாய் தனது பணியை செய்துவருகிறது. இதற்காக உயரமான இடத்தில் ஏறி அமர்ந்துகொண்டு நாய் இந்த செயலை செய்துவருகிறது.
நாயின் இந்த செயலை பார்க்கும் மக்கள் அதனிடம் ஆசிர்வாதம் பெறுவதுடன், அந்த நாயுடன் வீடியோ மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.
View this post on Instagram