அட.. 7 வயதில் அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது..? வளர்ந்து இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்.

செய்திகள்

7 வயதில் அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மகளாக நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவ்வை சண்முகி 1996 இல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. படத்தில் மேலும் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்த நிலையில், கமல் – மீனா இருவருக்கும் குழந்தையாக 7 வயது பெண் குழந்தை ஒன்று நடித்திருந்தது.

பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும், இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அந்த காதாபாத்திரத்தில் நடித்த அந்த குழந்தையின் பெயர் ஆன் அலெக்சியா. அவ்வை சண்முகி படம் அந்த குழந்தைக்கு பெரிய வரவேற்பை கொடுத்திருந்தாலும், ஆனால் அவரை வேறு எந்த படங்களிலும் காண முடியவில்லை.

அதற்கு காரணம் அவரது தாயார்தான். ஆம், அவ்வை சண்முகி படம் வெளியானதில் இருந்து அந்த குழந்தை எங்கு சென்றாலும் ரசிகர் கூட்டம் அவரை சூழுந்துகொண்டதால், தங்கள் குடுபத்தின் தனியுரிமை கருதி, இதற்குமேல் சினிமா வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம் அந்த அலெக்சியாவின் தாய்.

இதனை அடுத்து, ஆன் வளர்ந்தவுடன் எழுதுதல், மாடலிங், நடனம் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அவர் இப்போது ஊடக பணியாளர்களாக வேலைபார்த்து வருகிறாராம், ஆனால் அவர் திரைப்படத் துறையில் மீண்டும் வருவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *