இரண்டு கருவை சுமந்து கொண்டிருக்கும் பெண் மீண்டும் க ர்ப்பமான வினோதம்… அவரே வெளியிட்ட பதிவு காரணம் என்ன தெரியுமா?!

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கர்ப்பிணியான சம்பவம் வெளியாகியுள்ளது. முதலில் குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் இரட்டையர்களை பெற்றெடுப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

10 நாட்கள் இடைவெளியில் அவர் மீண்டும் கர்ப்பமானதை அடுத்து மூன்று குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் தாயாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தகவலை தமது சமூக ஊடக பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட அவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தமது இந்த நிலைக்கு மருத்துவர்கள் superfetation என அழைப்பதாகவும் ஒருமுறை கர்ப்பமானதும், உடம்பில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நிகழும் எனவும் ஆனால் தமக்கு அந்த மாறுதல்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் 10 சதவீத பெண்களுக்கே மாதம் இருமுறை கருமுட்டை வெளியாகும் 3 சதவீத பெண்களுக்கே ஒரே நேரத்தில் இருமுறை கருவுறும் நிலை ஏற்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் ஒரே நாளில் பிரசவம் நடக்கலாம் என நம்பப்படுவதால் வெவ்வேறு நாளில் கருவுற்றாலும், ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் என்றே கருதப்படும் என்கிறார் அவர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*