வாழ்க்கை எப்போதுமே அதிசயங்களை தன்னகத்தே கொண்டது. இதில் எப்போது அதிசயம் நடக்கும் என்பது யாராலும் யூகிக்க முடியாது. அந்த வகையில் அப்படியொரு அதிசயம் சாலையில் சுற்றித் திரிந்த பிரேசில்வாசியின் வாழ்க்கையில் நடந்துள்ளது.
பிரேசில் நாட்டில் சலூன்கடை வைத்திருப்பவர் அலெசாண்ட்ரா லோபோ. இவர் அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கி அதில் வந்த வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்த ஒருவரைப் பார்த்தார்.
அப்போது முடியெல்லாம் அடர்த்தியாக வளர்ந்து, முடியே வெட்டாமல் வாழ்ந்து வந்த அவரிடம் சாப்பிட எதுவும் வேண்டுமா எனக் கேட்டார் ஆனால் அவர் அதை வேண்டாம் எனச் சொல்லவே, அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவரது முடியை திருத்தி, தன் சலூன் கடையிலேயே அவரை பேஷனாக மாற்ற முடிவு செய்தார்.
மேலும் கடந்த பத்து வருசத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், இ றந்து விட்டதாக குடும்பத்தினர் நினைத்து வந்த நிலையில் இந்தப் புகைப்படம் அவரது வீட்டினருக்கே பெரும் ஷாக்காக இருந்தது.
உடனே அவருக்கு முடிவெட்டி பேஸ்புக்கில் புகைப்படம் போட்ட அலெசாண்ட்ரோ லோபோவை தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் இடத்தை அறிந்தனர். இதனால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் குறிப்பிட்ட அந்த நபர் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்.