பறவைகளில் தூக்கணாங்குருவிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. குளக்கரையிலுள்ள மரங்களில் இவை அதிகம் கூடு கட்டும். உயிர்களின் இலைநரம்புகள், நார்கள் இவற்றைக் கொண்டு தனது வீட்டை அற்புதமாக பின்னும், அந்த தொங்கு கூடுகள் பலரை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.
கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும்.
இக்குருவி களிமண் கட்டிகளை அப்பி அதில் மின்மினி பூச்சியினை ஒட்டி வைத்து கூட்டினை அழகு படுத்தும். ஆதிகாலத்தில் இருந்த மனிதனை விட அதி புத்திசாளித்தனமாக இன்று வரையும் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றது.
அதற்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. தன்னுடைய ஆண் துனை இறந்த சில விநாடியில் பெண் தூக்கணாங்குருவியும் இறந்து விடுமாம். இது கட்டு கதை என்று பலரால் கூறப்பட்டாலும் சான்றாக சில ஆதாரங்களும் இருக்கின்றன.
அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக் குருவிகளின் இனத்தை மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. நேரடியாய் எதையும் கற்கவோ ரசிக்கவோ வாய்ப்பற்ற வாழ்க்கை முறை வாய்த்தவர்கள் நம் குழந்தைகள்.
டிஸ்கவரி சேனல்களில் மட்டுமே விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் அவர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பொம்மைகளாகவே டைகர், லயன், ஸ்பேரோ, க்ரோ என பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நகரமயமாதல் என்பதே மனிதனை இயந்திரமாக்குவது தானே.
இந்த அவசர யுகத்தில் கிராமங்களின் வாழ்க்கைமுறையை ஒருமுறையேனும் தேடிப் பயணிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
வீடியோ இதோ நமக்காக..!!