அடேங்கப்பா! குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை கல்யாணியா இது? எப்போ எப்படி இருக்கிறார்.. பாருங்க காணொளி இதோ..!!

திரையரங்கம்

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான அள்ளித் தந்த வானம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி.கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்ட இவரது இயற்பெயர் பூர்னிதா. சினிமாவிற்காக கல்யாணி என்று மாற்றிக் கொண்டார்.

அள்ளித் தந்த வானம் படத்தில் இவரது சுட்டித்தனமான நடிப்பினால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் குருவம்மா, ரமணா, ஜெயம் போன்ற பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

மேலும் இதைத் தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு வெளியான சாருலதா தொடரில் நடித்த கல்யாணி அதன் பின்னர் ராதிகா நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அண்ணாமலை தொடரிலும் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆண்டாள் அழகர் என்ற தொடரிலும் நடித்து பிரபலமடைந்தார்.

சொல்லப்போனால் சினிமாவை விட அண்ணாமலை சீரியலில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ்ப் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானார். இவர் சீரியலில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுந்து வழங்கி தொகுப்பாளியாகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவராக பணியாற்றி வந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நவ்யா என்று பெயர் வைத்தார்கள். இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது மகளின் முதல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் நடிகை கல்யாணி.

அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் சின்னஞ் சிறு பெண்ணாக இருந்த கல்யாணி தற்போது குடும்பம் குட்டி என்று இப்படி குடும்பப் பெண்ணாக மாறி விட்டார் என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kalyani Rohit (@kalyanirohit)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *