அட! நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ வைரலாக பரவும் புகைப்படம்..!!

திரையரங்கம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த பிரபல நடிகை ரீமாசென். இவர்  கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பி பலமாகி விட்டார். அதன் பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் நாயகியாக நடித்தார்.

தமிழ்த் திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒரு காலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அறிமுகமான மின்னலே படத்தில் இடம் பெற்ற ‘வசீகரா’ பாடலே பயங்கர ஹிட் அடித்தது. விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் ரீமாசென்.

ரீமாவும், விஷாலும் சேர்ந்து நடித்த செல்லமே திரைப்படம் விஷாலுக்கும் திருப்புமுனை படமாக அமைந்தது. ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனானே..’பாடலும் இவர் ஆடி ஹிட் அடித்தது. சிம்பு நடித்த ‘வல்லவன்’ படத்தில் மிக அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் இடம் பெற்றார். அதன்பிறகு நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார் ரீமாசென்.

இவர் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடித்திருக்கும் ரீமாசென். கடந்த 2012ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இப்போது ‘ருத்ரவீர்’ என்ற மகனும் உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரீமாசென் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதைப் பார்த்த ரசிகர்கள் இப்போதும் இளமையாக இருக்கும் ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது கணவரோடு அவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகிறது. அதுமட்டும் அல்ல அவருடைய மகனும் அந்த புகைபடத்தில் உள்ளார். இதோ நீங்களும் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *