பீ தியை கி ளப்பும் புதிய வைரஸ்.! பிரிட்டனில் ஒரே நாளில் 33,364 பேர் பா திப்பு.! சென்னையில் 15 பேர் தனிமைப்படுத்தல்.!

செய்திகள்

பிரிட்டனில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா உ றுதியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா தொ ற்று பரவி வரும் நாடுகளின் எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கொரோனா வை ரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், பிரிட்டன் நாட்டில் புதியவகை கொரோனா இரண்டாம் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வை ரஸ் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து கொரோனா வை ரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான போக்குவரத்தை இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் த ற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன.

தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வை ரஸ் (New Str ain) பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவிகிதம் வேகமாகப் பரவுகிறது என்ற தகவலும் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வை ரஸ் தென்படுகிறது.

இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேரடியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் மீண்டும் கொரோனா பரிசோ தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி வழியாக இன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை பரிசோ தனை செய்ததில், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நபருக்கு கொரோனா வை ரஸ் தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், லண்டனில் இருந்து வந்த 15 பேர் த னிமைப்ப டுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வை ரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அ ச்சப்ப ட வே ண்டாம். தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *