என்ன டைட்டில்டா இது! இயக்குனராக அவதாரமெடுத்த தொகுப்பாளினி டிடி! வைரலாகும் பர்ஸ்ட் லுக்!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி, எங்கிட்ட மோதாதே ஃபுல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. மேலும் இவர் டான்ஸ் சூப்பர் டான்ஸ் இந்த நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார்.

இளமை துள்ளலுடன், அழகிய சிரிப்புடன் கலகலவென தமிழ் மக்கள் மத்தியில் வலம்வந்து இருக்கும் டிடி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தொகுத்து வழங்கியது மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை தொகுப்பாளரும், நடிகையுமாக  இருந்து வந்த டிடி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது முக்காதே பெண்ணே என்ற பாடலை இயக்கியுள்ளார். இதற்கு கோபி சுந்தர் என்பவர் இசையமைத்துள்ளார். இதற்கு ரசிகர்களின் ஆதரவை வேண்டி டிடி  தனது  டுவிட்டர் பக்கத்தில் பாடலின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் என்ன டைட்டில்டா  இது? என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *