அடடே!! நம்ம விஜய் டிவி குக் வித் கோமாளி II கனி யார் தெரியுமா??பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலத்தோட அக்காவா?

செய்திகள்

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிலையில் அதன் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாகவும், காமெடியாகவும் நடைபெற்று வருகிறது. இதில் கோமாளிகள் செய்யும் செயல்கள் அனைத்தும் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில்
ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா மற்றும் மதுரை முத்து என மக்களிடையே நன்கு பிரபலமானவர்கள் சிலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்கின்றனர்.

இதில் மக்களுக்கு பெருமளவில் பரிச்சயமில்லாத போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி. இவரது உண்மையான பெயர் கார்த்திகா. இவரது தந்தை இயக்குனர் அகத்தியன். இவரது ஒரு சகோதரி நடிகையும், பிரபல பிக்பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி.

மற்றொரு சகோதரி நிரஞ்சனி. இவர் காஸ்டியூம் டிசைனர். மற்றும் துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் இணைந்து நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கனி மக்கள் தொலைக்காட்சியில் சொல் விளையாடு என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *