மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா இந்த போட்டியாளர்! தீயாய் பரவும் தகவல்! செம குஷியில் ரசிகர்கள்!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

மேலும் கடந்த வாரம் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ரசிகர்கள் பலரும் சனத்திற்கு ஆதரவாக இணையத்தையே தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் இன்னும் தனது வீட்டிற்கு செல்லவில்லை எனவும், ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர்  மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக செல்லவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மைதானா? என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *