பிறர் பாராட்டும்படி கெஞ்சிய நிஷா! அவரை குறித்த ரகசியத்தை வெளியிட்டு அதிர்ச்சியில் மூழ்கடித்த கமல்! வைரலாகும் வீடியோ

காணொளி

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. மேலும் முந்தைய சீசன்களை போல இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை என விறுவிறுப்பாகவும், காரசாரமாகவும் உள்ளது

இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் 13 பேரில் இந்த வாரம் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ், போட்டியாளர்களை கன்பெஷன் அறைக்குள் அழைத்து 60 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் என்ன செய்தீர்கள் என கேட்க போட்டியாளர்கள் தங்களது பங்களிப்பினை குறித்து கூறினர்.

அதனை தொடர்ந்து உள்ளே சென்று வந்த போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களிடம் செக்கப்  செய்தார்கள் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து இன்று கமலிடம் பேசிய நிஷா ரகசியத்தை காப்பாற்றியதற்காக தங்களை பாராட்டும்படி கேட்க,  அதற்கு கமல் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா எனக்கூறி நிஷா காப்பாற்றபட்டுள்ளதாக டக்கென அறிவித்துள்ளார். இதனை கேட்டதும் நிஷா உச்சகட்ட இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும்  அர்ச்சனா கண்கலங்கினார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *