ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக அறிமுகமாகி கலக்கியவர் மிர்ச்சி செந்தில் ஆவார். இவர் அதற்குப் பிறகு சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற பிரபல சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் இவர்கள் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.
மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சீரியல் ஷூட்டிங் எதுவும் நடைபெறாத காரணத்தினால் சீரியல் நடிகர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் மிர்ச்சி செந்திலுக்கு பின்னால் அவரது மனைவி ஸ்ரீஜா ஒளிந்து கொண்டு நிற்கிறார். அந்த வீடியோவில் மிர்ச்சி செந்தில் தமிழில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறுகிறார். அதேபோல அவரது மனைவி ஸ்ரீஜாவும் மலையாளத்தில் விஷு வருட வாழ்த்துக்களை கூறுகிறார். மிர்ச்சி செந்திலும் தன்னுடைய மனைவியை போலவே மலையாளத்தில் புதுவருட வாழ்த்துக்களை கூற முயற்சிக்கிறார்.
View this post on Instagram