முதியவர் ஒருவருக்கு 50 வருஷமா மூக்கில் சி க்கிய மர்ம பொருள்.. கடைசியில் கா த்திருந்த அ திர்ச்சி தாவல்.!!

செய்திகள்

59 வயதான நபர் ஒருவரின் மூக்கிற்குள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த நாணயம் ஒன்றை தற்போது மருத்துவர்கள் அகற்றியுள்ள நிகழ்வு ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த அந்த நபர் தனது ஆறு வயதில் நாணயம் ஒன்றை மூக்கின் வலது நாசியில் வைத்து உள்ளே புகுத்தியுள்ளார்.

இதையடுத்து, இதைப் பற்றி தனது தாயிடம் இது குறித்து கூற பயந்துள்ள அவர், அது மட்டுமில்லாமல், காலப் போக்கில் அவரும் அதனை மறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் தனது வலது நாசி மூலம் மூச்சு விட முடியாமல், இரவு தூங்கவும் முடியாமல் அவதிப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், அருகிலுள்ள மருத்துவமனையை அவர் அணுகிய போது, அவரது மூக்குப் பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். கருப்பு நிறத்தில் எதோ தடைபட்டு இருப்பதை அறிந்து கொண்ட மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவரது மூக்கில் அடைந்திருந்த நாணயம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் மூச்சுவிட எந்த குறையும் இல்லாமல் அந்த நபர் பூரணமாக குணமடைந்துள்ளார். மேலும் மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நாணயம் தற்போது ரஷ்யாவில் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *