90ஸ் திரையுலக காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். ஆனால் இவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரையுலகில் தனது வாய்ப்புகளை இழந்து, திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.
மேலும் இந்நிலையில் தமிழ் திரையுலகில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் குறைவதற்கு மிக முக்கிய காரணம், நடிகை சிம்ரன் காதல் உறவில் ஈடுபட்டது என்று தெரியவந்துள்ளது. ஆம் நடிகை சிம்ரன் பிரபு தேவாவின் தம்பியும் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராஜு சுந்தரமுடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார்
இந்த விஷயம் சினிமா தயாரிப்பாளர்கள் காதுக்கு தெரியவந்துள்ளது. காரணமாக சிம்ரனின் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதாம் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.