என்னது! நடிகை அதுல்யா ரவி இப்படிப்பட்டவரா? அவரை வச்சு படம் எடுத்துட்டு புலம்பி தள்ளும் தயாரிப்பாளர்! ஏன் தெரியுமா?

செய்திகள்

டப்ஸ்மாஷ், குறும்படம் போன்றவற்றில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை அதுல்யா ரவி. அதனைத் தொடர்ந்து அவர் சமுத்திரக்கனி நடித்த ஏமாளி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் அவர் காதல் கண்கட்டுதே, நாடோடிகள் 2 மற்றும் கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். மேலும் அதுல்யா ரவி பிரபலமாவதற்கு முன்பே நடித்த திரைப்படம் என் பெயர் ஆனந்தன். இப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் படக்குழு அதுல்யா ரவி குறித்து புகார் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது அதுல்யா ரவி ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் சமுத்திரகனி,சுசீந்திரன் போன்ற பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். அதனால் அவர் தன்னை ஒரு பெரிய ஸ்டார் என நினைத்துக் கொண்டு எங்களது படம் விருது பெரும் செய்தியைக் கூட டுவிட்டரில் பகிர மறுக்கிறார்.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் என படத்தின் எந்த ப்ரோமோஷனிலும் பங்கேற்பதில்லை. எந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அவரிடம் கெஞ்ச வேண்டியதாக உள்ளது எனக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *