செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ப்ரியாபவானி ஷங்கர். அதனை தொடர்ந்து வெள்ளிதிரைக்கு தாவிய அவர் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2, அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் அகம் பிரம்மாஸ்மி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ‘லையிட்டா மேல தோள்பட்டை தெரியுது. போச்சு, பிரியா பவானி சங்கர் பட வாய்ப்புக்காகவும, பணத்திற்காகவும் கிளாமராக மாறிட்டாங்க என சில யூடுயூப் சேனல்ல ஆரம்பிச்சுருவாங்க என்று கமெண்டு செய்துள்ளார்.அதற்கு ப்ரியா பவானி சங்கர், சில கமெண்டுகள் நான் மனதில் நினைத்ததை போன்று இருக்கும். அதில் இதுவும் ஒன்று என்று பதிலளித்துள்ளார்.
பிரியா பவனி ஷங்கர் அதற்கு அழகான ஒரு பதிலை கொடுத்துள்ளார் அதில் ஒரு கமெண்டுகள் மட்டும் எப்போதும் மனதில் இருக்கும் அதில் உங்கள் கமெண்டும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.அதற்கு அந்த கமெண்ட் செய்தவர் எப்படியும் மிகுந்த சந்தோசத்தில் இருப்பர்.
View this post on Instagram