நேற்று வரை சவப்பெட்டி தயாரிப்பாளர் இன்று மல்டி மில்லியனராக மாற்றிய ஒரே ஒரு கல்… இது தான் கூரையைப் பிய்த்து கொட்டுவதோ?

காணொளி

இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார்.இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung(33) என்ற நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சவப்பெட்டி தயாரிக்கும் வேலையை செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் வீட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் விழுந்து உடைத்து கீழே விழுவது போன்று இருந்துள்ளது. இதனை அவதானிக்க சென்ற போது மிகவும் சூடாக இருந்துள்ளது.அதன் பின் அதை மண்வெட்டி கொண்டு வெளியில் எடுத்த பின்பு, அது ஒரு விண்கல் என்பதும் பல மில்லியன் மதிப்பு கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து Josua Hutagalung கூறுகையில், அன்றைய தினம் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சில வீடுகள் எல்லாம் குலுங்கின. நான் வீட்டை சுற்றி தேடிய போது, கூரை தகரம் உடைந்திருப்பதைக் கண்டேன்.
அதன் பின், நான் கீழே பார்த்த போது இது இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பலரும் விண்கல் என்று கூறினர். நான் யாரும் உள்ளூர்வாசிகள் வேண்டும் என்றே கல்லை எறிந்துவிட்டு சென்றார்களா என்று நினைத்தேன்.

இந்த அரிய கல்லை பார்ப்பதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர், கல்லை அவர்கள் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.அதன் பின் இந்த விண்கல் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல், இதற்காக அவருக்கு 1.4 மில்லியன் பவுண்ட், அதாவது அவருடைய 30 வருட சம்பளத்திற்கு சமமான தொகை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டது.

அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் உடனடியாக இந்த விண்கல்லை அமெரிக்காவிற்கு அனுப்பினார். விண்கல்லின் உட்புறம் அடர் சாம்பல் மற்றும் கருப்பு, சிறிய வெளிர் நிற புள்ளிகள் உள்ளன.மிகவும் அரியவகை இந்த விண்கல் குடியிருப்பு பகுதிகளில் விழுவது மிகவும் அரிய நிகழ்வு என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *