வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அனிதாவை நோஸ் கட் செய்த உலகநாயகன் ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நிகழ்ந்த பஞ்சாயத்துகள் குறித்து விவாதம் செய்து கமல் அதை தீர்த்து வைத்தார்.மற்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி கையாளுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் உலகநாயகன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அதை சம்பந்தப்பட்டவர்களின் மனம் நோகாமல் தீர்த்து வைப்பதில் வல்லவராக இருக்கிறார்.

ஆனால் அவரையும் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் சார் என அனிதா சொன்னது தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்.அவர் வாய்ப்பு கொடுக்கும்போது வேண்டாம் என மறுத்து விட்டு பின்னர் அவர் என்னை பேச விடாமல் செய்து விட்டார். ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். அவர்களுக்கு தான் சப்போர்ட் செய்கிறார் என்பது போல அனிதா நிகழ்ச்சி இடைவெளியில் சனமிடம் பேசினார்.

அவர் தமிழில் பேசினாலும் அதற்கு சப்-டைட்டில் போட்டு பிக்பாஸ் டீம் அழகு பார்த்தது. பதிலுக்கு சனம், அனிதாவுக்கு ஆறுதல் சொல்ல முயன்றும் கூட அது தோல்வியில் தான் முடிந்தது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனிதாவை தற்போது கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் #AnithaSampath என்னும் ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கடைசில கமல் சார் பத்தியே புகார் சொல்லிட்டீங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *