அபர்ணா முரளி மாதிரி மனைவி கிடைத்தால் ஏரோபிளேன் என்ன, ராக்கெட்டே விடலாம்.! சூரரைப் போற்றும் ரசிகர்கள்.!

soorarai potru

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது சூரரைப்போற்று திரைப்படம். இந்த படம் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், எதிர்பார்த்தப்படி இந்திய விமானத்துறையின் அனுமதி உடனடியாக கிடைக்காமல் தாமதமாக கிடைத்ததால் படத்தினை தீபாவளியொட்டி நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்தனர். இந்நிலையில், சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் நேற்று இரவு 10:30 மணிக்கு வெளியாகியுள்ளது. தற்போதுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சூரரைப்போற்று திரைப்படத்திற்கு.

இந்த படத்தின் கதாநாயகி அபர்ணா முரளியின் பொம்மி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகி சொந்தக் காலில் நின்று சாதிப்பதை சிறப்பாக காட்டியுள்ளனர். அந்த படத்தில் கதாநாயகியின் தொழிலுக்கு சூர்யா உதவி எதுவும் செய்வதில்லை என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.

ஆனால், தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்திக்கும் சூர்யா, ஒரு கட்டத்தில் தொழிலில் முன்னேறிக்கொண்டிருக்கும் மனைவியிடம் கடன் கேட்கும் அழகான காட்சி ஒன்றும் படத்தில் உண்டு. லட்சியம் நிறைந்த ஒருவனுக்கு இதுபோன்ற மனைவி கிடைத்தால் ஏரோபிளேன் என்ன, ரொக்கெட்டே விடலாம் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*