பிரபல தமிழ் சீரியல் நடிகை ஸ்பூர்த்திக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு தொடரில் இயக்குநர் திருமுருகன், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஸ்பூர்த்தி. இந்த நிலையில் தனக்கு திருமணமாக இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதத்தில் ஸ்பூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அக்டோபர் மாதத்தில் ஸ்பூர்த்தி கவுடாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது ஸ்பூர்த்தி கவுடாவுக்கும் அஷ்வன் கவுடா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து தம்பதியின் அழகிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.