பிக் பாஸ் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷாவின் ராம்ப் வாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்பான காட்சிகள் ஹாட்ஸ்டார் இல் Unseen வீடியோ என்று ஒளிபரப்பப்பட்டு வந்தது.
ஆனால், இந்த முறை அண்மையில் விஜய் தொலைக்காட்சி துவங்கிய விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் டிவியில் ஒளிபரப்பப்படும் காட்சிகளை விட இந்த Unseen வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் உள்ள சில சுவாரஷ்யமான நிகழ்வுகள் இணைத்தில் வெளியாகியுள்ளது.
அதில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி போல போட்டியாளர்களில் ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.
அதிலும் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷாவின் ராம்ப் வாக் அனைவரையும் சிரிக்க வைத்தது. இருவரும் நடந்து முடித்த பின்னர்ரியோவை நிஷா முத்தமிட்டு இருந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.