S.S.ராஜமௌலி இந்திய திரையுலகமே அவரை வியந்து பார்க்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான இயக்குனர் தான் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் தான் உலகளவில் பிரபலமானது.
குறிப்பாக சொல்லப்படுவது பாகுபலி 2 திரைப்படம் இதுவரை அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து மிகப்பெரிய சாதனைப் புரிந்துள்ளது.
இவர் அடுத்ததாக யாருடன் பணிபுரிவார் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் இருவரை வைத்து RRR பீம் ஆஃ ராமராஜு என்ற திரைப்படத்தை உருவாக்கி வந்தார்.
இந்தப்படமும் பாகுபலி படத்தைப் போலவே மிக பிரம்மாண்டமாக தான் உருவாகிறது. தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட 5 இந்த மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, இது குறித்து படக்குழுவினர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.