இந்த வருடத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் விஜயின் மாஸ்டர் படம் இப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி வருகிறது.
மேலும் இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகயுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் புதிதாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் விஜய் நடிக்கும் இந்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டது இப்படம் வெளியிடப்படுவதர்காக தயாராக உள்ளது.
#Master Teaser coming soon 👍 !!
— Xavier Britto (@XBbritto) October 4, 2020
மேலும் இப்படம் ஏற்கனவே இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனை அடுத்து இப்படத்தின் அப்டேட் வெளியிடுமாறு ரசிகர்கள் படக்குழுவை வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸ்டர் சேவியர் பிரிட்டோ படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் கூறியுள்ளார்.