ருத்ர மூர்த்தியும், நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீ ராத கடன் தீரும்.
மேலும். கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர்.
கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்பவே முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம்.
ராகு, கேது போன்ற பா ம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூ டாது.
மேலும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூ டாது.
சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூ டாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூ டாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.
சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான்.