நயன்தாரா, த்ரிஷாவிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா என சோனியா அகர்வால் ஆவேசம்... அப்படி என்ன கேள்வி கேட்டார்கள் தெரியுமா...!!

நயன்தாரா, த்ரிஷாவிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா என சோனியா அகர்வால் ஆவேசம்… அப்படி என்ன கேள்வி கேட்டார்கள் தெரியுமா…!!

திரையரங்கம்

நயன்தாரா, த்ரிஷாவிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் சோனியா அகர்வால்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த முன்னணி நடிகை சோனியா அகர்வால்.

இயக்குனர் செல்வராகனை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான், திரிஷா, நயன்தாரா மூன்று பேரும் ஒரே வயதுக்காரர்கள்தான். 82-83ல பிறந்தவர்கள். ஆனால் என்னிடம்  மட்டும் நீங்க அம்மா கேரக்டர்ல நடிப்பீங்களானு கேட்டுட்டு வரும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கு.

இதே கேள்வியை நீங்க திரிஷாகிட்டயோ, நயன்தாராகிட்டயோ கேட்பீங்களானு அவர்களிடம் கேட்டிருக்கேன்.

நான் பிட்டாக இருக்கிறேன், என்னிடம்  இளமை இருப்பதுடன் உடற்கட்டையும் பராமரிக்கிறேன், அப்பறம் ஏன் என்னை அம்மா வயதுக்கு யோசிக்குறீங்க?

ராதிகா மேடம், குஷ்பு மேடம் போல வயது வந்ததும் அம்மா கேரக்டரில் நான் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *