அஜித் செய்த இந்த பண உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது… யாருக்கு..?எதற்காக..?எவ்வளவு..? தெரியுமா…?பண உதவியோடு சுவாரசியமான இன்னொரு விஷயத்தையும் செய்துள்ளார்.. வைரல் நியூஸ்…!!

திரையரங்கம்

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் தல அஜித் உதவி செய்வதை எப்போதுமே வெளியில் சொல்வதே இல்லையாம்.

தன்னுடன் நெருங்கி பழகும் இயக்குனர்கள், உதவியாளர்கள் அனைவருக்குமே இவர் பல உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக தன்னுடன் இருப்பவர்களுக்கு சொந்த வீடு, பண உதவி என்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்து செட்டிலாக்கி விடுவாராம்.

தான் மட்டும் சுயமாக சம்பாதித்து வாழ்க்கையை சந்தோசமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்து கை தூக்கி விடுவது தான் தல அஜித்தின் பழக்கமாம்.

இந்த நிலையில் தனக்கு GYM trainer-ஆக இருந்தவருக்கு, 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் காசோலை கொடுத்து தல தெறிக்க விட்டுள்ளார். அதாவது ஜிம் டிரைனர் வீடு கட்டுவதற்காக தனது அம்மாவின் நகையை அடமானம் வைத்துள்ளார்.

அதனை தற்போது தல அஜித் திருப்பி கொடுத்துள்ளாராம். இதைவிட சுவாரசியம் என்னவென்றால் 5 லட்ச ரூபாய்க்கு உண்டான ரூபாய் 10,000 ஜிஎஸ்டி தொகையும் சேர்த்து கொடுத்துள்ளது தான். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அவருக்கு ரசிகனாக இருப்பதற்கு பெருமையாக இருக்கு என கொண்டாடி வருகின்றனர்.

அவர் கொடுத்த செக் லீப், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பதான் புரியுது அவர் கூட ஒரு படம் நடிச்சாலும் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *