அனுஷ்கா பார்த்து ஆரம்பித்து வைத்த சோலோ ஹீரோயின் பார்முலாவை தான் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.முதன் முதலில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் தான் நயன்தாரா.

தற்போது நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை தான் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள் பிரபல நடிகையும் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர்.
நயன்தாராவுக்கு அப்பாவியான கதாபாத்திரம் அப்படியே பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருக்கும். ஆனால் அது ஜான்வி கபூருக்கு இது செட்டாகுமா என்பது சந்தேகம்தான்.
இளம் வயதிலேயே முதிர்ச்சியடைந்த முக தோற்றத்தில் இருக்கும் ஜான்வி கபூர் தலை நான் கீழாகத்தான் குதிப்பேன் என இந்த படத்தை ரீமேக் செய்வதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறாராம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரமே வெளிவந்து விடும் என்கிறது சினிமாதிரை.