
ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் உணவு சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம்.
சாப்பிட்டவுடன் குளித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா…?
உணவு சாப்பிட்ட உடன் குளிப்பதால் உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இல்லாத போது, செரிமானம் தாமதமாக நடைபெறுகிறது.
உண்ட அந்த உணவு குடலில் அப்படியே நொதிக்க அல்லது அழுக ஆரம்பித்து, உங்களை மிகவும் சோர்வாகவும், மந்தமாகவும் உணரச் செய்வதுடன், மலச்சிக்கல் மற்றும் சில சமயங்களில் குமட்டல் பிரச்சனையையும் கூட ஏற்பட வைக்கும்.
ஆயுர்வேதம்
ஆயுர்வேதத்தின் படி, உடலில் உள்ள நெருப்பு உறுப்பு தான் உணவுக்கு பிந்தைய செரிமானத்திற்கு காரணமாகும். நீங்கள் சாப்பிட்டதும் உடனே குளிக்கும் போது, செரிமானம் நடக்க உதவ வேண்டிய ஆற்றல் அல்லது நெருப்பு, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க திருப்பி விடப்படுகிறது.
இந்த காரணத்தினால் தான், பண்டைய மருத்துவ முறை உணவு உட்கொண்ட பிறகு குறைந்தது 2 மணிநேரத்திற்கு பிறகே குளிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
அறிவியல்
அதே சமயம் அறிவியலின்படி உணவு உட்கொண்ட பின்பு குறைந்தது 35 நிமிடம் கழித்து குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
Leave a Reply