பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் பெரும்பாலனோர் அதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. ஆனால் இதில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஆர்வம் கொண்டு சில பல படங்களில் நடிப்பார்கள். அந்த வகையில் ஸ்ரீசாந்த் என்ற வேகப்பந்து வீச்சாளர் கேரள சினிமாவில் நடித்துக் கொண்டுள்ளார்..
மேலும் அந்த வாயில் விராட் கோலியும் கிரிக்கெட்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட தோனி அடுத்ததாக சினிமாவில் களமிறங்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதில் அவர் நடிகராக இல்லாமல் தனது மனைவி சாக்ஷி உடன் சேர்ந்து ஒரு டைம் ஃபிக்ஷன் கதையை தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் முடிந்ததும் அதற்கான வேலைகளில் தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவே தோனி பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் தோனி தயாரிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படம் அமேசான் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.