நடிகர் சோனு சூட்டிற்கு இப்படி ஒரு விருதா...? ஐ.நா. சபை கௌரவம்...!! எதற்கு இந்த விருது தெரியுமா...?

நடிகர் சோனு சூட்டிற்கு இப்படி ஒரு விருதா…? ஐ.நா. சபை கௌரவம்…!! எதற்கு இந்த விருது தெரியுமா…?

திரையரங்கம்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலத்தில் பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். பல தொழிலாளர்கள், பல கிமீ நடந்தே சென்று தங்களது சொந்த ஊர்களை அடைந்தனர். அதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

 

அப்போது நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தார் நடிகர் சோனு சூட். மேலும், ஊரடங்கு உத்தரவால் பாதிப்படைந்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கி அனுப்பியது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் வீடு திரும்புவதற்கான விமான வசதி உள்ளிட்டவற்றையும் நடிகர் சோனு சூட் செய்திருந்தார்.

 

பல மக்களுக்கு பொருளாதார ரீதியிலும் தேவையான பொருட்களையும் வாங்கி உதவிய சோனு சூட்டை பலர் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிப்படைந்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்கு சோனு சூட் உதவியதை அடுத்து சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஐநா சபை. இதனை அடுத்து, பலர் அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து கருத்து தெரிவித்த சோனு சூட், “ஐநா சபை என்னை இவ்வாறு கவுரவப்படுத்தியுள்ளது எனக்கு கிடைத்த அங்கீகாரம். மிகவும் சிறப்பாக உணர்கிறேன். என்னால் செய்ய முடிந்ததை மக்களுக்கு செய்தேன். இவ்வாறு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது ஒரு அரிய கவுரவம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *