தேவி 2 படத்தில் நடித்த பிரபல நடிகருக்கு படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு…! எந்த நடிகர் தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நடிகர் சோனு சூட் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் தேவி 2 என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது, மேலும் விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில் நடிகர் சோனு சூட், பல்வேறு மக்களுக்கு பலவிதமான முறையில் உதவி செய்துள்ளார்.

இதற்காக பலரும் அவரை பாராட்டி வந்தனர், மேலும் தற்போது தெலுங்கு திரைப்படமான அல்லுடு அதுரூஸ் என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர்கள் அனைவரும் அவர் செய்த உதவிகளை பாராட்டி கைதட்டி, சால்வை அணிவித்து வரவேற்று உள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*