இரவில் குளிப்பது நல்லதா..?காலையில் குளிப்பது நல்லதா..?இரவில் குளித்தால் என்ன ஆகும்..?இரவில் குளித்தால் நன்மையா..? தீமையா..?

இரவில் குளிப்பது நல்லதா..?காலையில் குளிப்பது நல்லதா..?இரவில் குளித்தால் என்ன ஆகும்..?இரவில் குளித்தால் நன்மையா..? தீமையா..?

ஆரோக்கியம் பாட்டி வைத்தியம்

கூழானாலும் குளித்துக் குடி என்பது பழமொழி. எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்கவும், சுகாதாரமாக இருக்கவும் குளியல் தான் நமக்கு உதவுகிறது.

அதே சமயம் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இப்படி குளிப்பது சுகாதாரத்தை மட்டும் உயர்த்தாமல் உளவியல் ரீதியாகவும் பல அற்புதங்களை வழங்குகிறது.

காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது ஏன் நல்லது என்று காண்போம்

முகப்பருக்கள்

காலையில் இருந்து மாலை வரை வெயிலில் அலைந்து விட்டு வந்து முகத்தில் எண்ணெய் பசையுடன் அப்படியே தூங்குவதனால் உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம்.

இரவு தூங்கும் முன் ஜிங்க் சோப்பைக் கொண்டு உடலை சுத்தம் செய்வது உங்கள்  முகத்தில் முகப்பருக்கள் வருவதில் இருந்து பாதுகாக்கும்.

தலைமுடி

இரவு நேரத்தில் தலைக்கு குளித்து விட்டு காலையில் எழுந்தால் உங்கள் முடி மிருதுவாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்குவது உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

தலையணையில் உள்ள கிருமிகள்

தலையில் நிறைய பாக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும். இரவு தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் அப்படியே படுத்து தூங்கும் போது இந்த பாக்டீரியாக்கள் உங்கள் தலையணைக்கும் பரவும்.

இதை தவிர்க்கும் விதமாக வாரத்திற்கு இரு முறையாவது தூங்கும்முன் தலையை சுத்தம் செய்வது நலம் பெயர்க்கும்.

உளவியல்ரீதியான மாற்றம்

அறிவியலின் அடிப்படையில் மிதமான வெப்பம் டென்ஷன் மற்றும் பதட்டத்தையும் தடுக்கும், மேலும் இது உடல் அளவையும் தாண்டி உளவியல் ரீதியாகவும் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *