ஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சல்…. பார்சலை பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!! அப்படி பார்சலில் என்ன இருந்தது தெரியுமா…?

செய்திகள்
ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றில் செல்போன் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு சோப்பு அனுப்பப்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் யாரும் வெளியே செல்லவே தயக்கம் காட்டி வரும் சூழ்நிலையில் தற்போது ஆன்லைன் தளங்களில் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக சில போலி நிறுவனங்களும் பொருட்கள் விற்பது போல ஏமாற்றி வரும் மோசடி சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகின்றன.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நவீன மாடல் மொபைல் ஒன்றினை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த பார்சல் அவருக்கு வந்தது. வந்த பார்சலை ஆசையாக அவர் பிரித்து பார்த்தபோது அதில் சலவை சோப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இருந்தாலும் அவர் அளித்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் சிலர் கூறியது என்னவென்றால் பொருட்களுக்கு ஆன்லைனில் ஸ்டார் ரேட்டிங் இருக்கிறது. அதைப்போல பொருட்களை விற்கும் முகவர்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் இருக்கும். அதை சோதித்து பிறகு பொருட்களை வாங்கினால் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *