எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த இலையின் சாறை குடிப்பதால்!! நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்னு தெரியுமா?

ஆரோக்கியம்

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ள சீந்தில் கொடி ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது. நீரிழிவு நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. மேலும் இந்நோய் நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இதற்கு கரணம் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்றவை இஅதற்கு காரணமாக விளங்குகிறது.   சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்:

மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஆரோக்கியமான இதயம், சிறுநீரக செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உள்ள உறுப்புக்கள் சீராக காணப்படும். அதுமட்டுமின்றி நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி செய்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆயுர்வேதத்தில் பல வகையான மூலிகைகள் உள்ளன. மூலிகை வகைகளில் ஒன்று சீந்தில் கொடி இதன் வேர் அழியாத தன்மை கொண்டது. மேலும் சீந்தில் கொடியை ஆங்கிலத்தில் கிலோய் என்றும், டினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயரை கொண்டுள்ளது. மேலும் இந்த சீந்தில் கொடி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரையிலான ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது. இவை அழற்சி எதிர்ப்பு, ஆர்த்ரைடிக் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்றவற்றை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இதனை அதிகமாக பயன்படுத்துகின்றன.

நீரிழிவு நோய்:

சீந்தில் கொடியானது உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இவை குளுக்கோஸை எரிப்பதற்கு பயன்படுகிறது. இவை உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இந்த கொடியானது நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இவை உடலில் உள்ள செரிமான அமைப்பை சீராக பராமரித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சீந்தில் சாறு:

சீந்தில் கொடி சாறை தினமும் காலையில் அருந்தி வந்தால் உடலுக்கு மிக நல்லது அதுமட்டுமின்றி உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஐந்தில் கோடி சீந்தில் இலை மற்றும் தண்டுகளை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து நன்கு கொதித்த பிறகு அதை வடிக்கட்டி கொள்ள வேண்டும். பிறகு அந்த சாறில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அதை குடித்து வந்தால் உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். இவை எண்ணற்ற நோய்களை குணப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *